Database management system in tamil

 தரவுத்தள மேலாண்மை அமைப்பு 

(Data base management)


DBMS  என்பது தரவுத்தள மேலாண்மை அமைப்பு (database management system ) என்பதன் விரிவாக்கமாகும். நாம் இதை வார்த்தைகளாக பிரித்து அதன் அர்த்தங்களை காண்போம். தரவுத்தளம் என்பது தரவுகளை சேமிக்க, மீட்டெடுக்க மற்றும் நிர்வாகிக்க கூடிய ஒரு இடமாகும். 


தரவு என்றால் என்ன?
What is data


அர்த்தமுள்ள தகவல்களாகிய உங்கள் பெயர், உங்களுக்கு பிடித்தமான நிறம் முதல் சிக்கலான தரவுகளாகிய விஞ்ஞானிகளால் கையாளப்படும் வானியல் தரவுகள் வரை அனைத்தும் தரவுத்தளத்தின் கீழ் வருகின்றன. மேலாண்மை அமைப்பு (management) என்பது தரவை நிர்வாகிப்பதற்கான நிரல்களின் ஒரு தொகுதியை குறிக்கிறது. இது சேமித்தல் ,மீட்டெடுத்தல் (அ) திரும்ப பெறல் , வடிகட்டுதல் போன்ற பல்வேறு செயல்களை கொண்டுள்ளது. MySQL Oracle போன்றவை பிரபலமான தரவுத்தள மேலாண்மை அமைப்புகளாகும். தரவிற்கான பாதுகாப்பை வழங்குதல்,பயனர்களுக்கு எளிமையான அணுகுதல் போன்றவை DBMS-ன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும்.




DBMS - அறிமுகம்


'தரவு தளமேலாண்மை அமைப்பு ' என்பது , தரவுகளை உருவாக்க மற்றும் நிர்வாகிப்பதற்கான ஒரு அமைப்பு மென்பொருளாகும். DBMS பயனர்கள் மற்றும் நிரலர்களுக்கு தரவுகளை உருவாக்க , மீட்டெடுக்க , புதுபிக்க மற்றும் நிர்வாகிப்பதற்கான ஒரு முறையான வழியை வகுக்கிறது.



தரவுத்தளத்தில் எந்த வகையான தரவுகள் சேமிக்கப்படுகின்றன?


ஒரு தரவுத்தளத்தில் தொடர்புடைய தரவுகளை ஒன்றாக சேர்த்து சேமிப்பதை அட்டவணை என்று அழைக்கிறோம். இது ஒரு பெயரில் எங்கே , எந்த தரவு சேமிக்கப்படுகிறது என்பதை அடையாளம் காண உதவுகிறது.




தரவுத்தள மேலாண்மை அமைப்பின் (DBMS) பரிணாம வளர்ச்சி



தரவுகளை சேமித்தல் என்ற கருத்துரு பல்வேறு வடிவமைப்பில் 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.முந்தைய நாட்களில் , தரவுகளை சேமிக்க துளை அட்டை (punched card) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. பிறகு கோப்புகள் (files) பயன்படுத்தப்பட்டன. கோப்பு அமைப்புகளே தரவுத்தள அமைப்பின் முன்னோடி என்றழைக்கப்படுகின்றன.

கோப்பு அமைப்பில் , குறியீட்டு,சீரற்ற மற்றும் தொடர் அணுகல் போன்ற பல்வேறு அணுகல் முறைகள் உள்ளன. கோப்பு அமைப்பில் பின்வரும் பல வரம்புகள் உள்ளன.


தரவு நகல்கள் (data copy)


ஒரே தரவானது,செயலாக்கத்நிற்கான பல வளங்கலால் பயன்படுத்தப்பட்டது. இது ஒரே தரவின் பல தகவல்கள் உருவாக்கி இடங்களை வீணாக்கியது.


அதிக பராமரிப்பு 


அணுகல் கட்டுப்பாடு மற்றும் தரவு நிலைத்தன்மையை சரிபார்க்க அதிக பராமரிப்பு தொகை தேவைப்பட்டது .


பாதுகாப்பு (security)


தரவுக்கு குறைந்த பாதுகாப்பே வழங்கப்பட்டது . எனவே கோப்பு அமைப்பின் மேற்கூறிய வரம்புகளை சமாளிக்க தரவுத்தள அமைப்புகள் பிரபலமானது.



DBMS கருத்துருக்கள்


அனைத்து விதமான தரவுத்தள மேலாண்மை அமைப்புகளுக்கும் உறவுநிலை தரவுதள மேலாண்மை அமைப்பு ( relational database management system) மற்றும் பொருள் தரவுத்தள மேலாண்மை அமைப்பு ( ODBNS - Object database management system) போன்ற பொருந்த கூடிய சில தர நிலைகள் உள்ளன. அனைத்து DBMS ம் பினவரு இரண்டு அடிப்படை கருத்துக்களை பின்பற்றுகின்றன.


ACID பண்புகள்


இந்த சுருக்கம் அணுக்கோப்பு ( atomicity), நிலைத்தன்மை (consistency),தனித்த நிலை(isolation), நீடித்த திறன் (durability) என்பதை குறிக்கும். முக்கியமான விதியை குறிக்கிறது.. அணுகோப்பு , பயனர் தரவுத்தளத்தின் தரவை புதுப்பிக்கும் செய்முறையை செய்யும் போது "அனைத்து அல்லது ஒன்றுமில்லை" (all or notting) என்ற விதியை கடைபிடிக்கிறது. இந்த புதுப்பித்தல் செயல்பாடு பரிவர்த்தனை என்று அழைக்கப்படும். மற்றும் ஒன்று வெற்றியடைகிறது அல்லது தோல்வியடைகிறது தரவு அமைப்பின் உள்ள மாற்றங்கள் ஏதெனும் ஒரு கொடுக்கப்பட்ட நேரத்தில் நிலையானதாக இருக்கும். இந்த பண்பு வெற்றிகரமான பரிவர்த்தனைக்கு உதவுகிறது. ஒரே நேரத்தில் பரிவர்த்தனை செய்யும்‌ போது தனித்த நிலை பண்பு தேவைப்படுகிறது. பல பயனர்கள் ஒரே பொருளை ஒரே நேரத்தில் அணுகுவதன் மூலம் செய்யும் பரிவர்த்தனையே உடன்நிகழ் (concurrent) பரிவர்த்தனை எனப்படும். தரவுத்தள புதுப்பித்தலில் உள்ள முரண்பாடுகளை தடுக்க பிற பயனர்களிடமிருந்து பரிவர்த்தனைகள் தனிமைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தபடுகின்றன. இதுவே நிலைத்தன்மை யின் அளவு எனப்படும். ஒரு அமைப்பு தோல்வி அடையும் போது அனைத்து பரிவர்த்தனை களையும் திரும்ப பெறும் திறனே நீடித்த திறன் எனப்படும்.


கட்டுப்பாட்டு ஒருங்கிணைத்தல் மற்றும் நிலை நிறுத்தல்



 பயனர்களிடையே ஒரு தரவு பகிரப்படும் போது முறையான அணுகல் கட்டுப்பாடு தேவைப்படுகிறது . மற்றும் பயன்பாடுகளின் தரவை மாற்றும் உரிமை நிலை நிறுத்துதல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.



DBMS தரவுதள மாதிரிகள்

தரவுத்தள தொழில்நுட்பம் , உறவு நிலை மற்றும் பொருள் உறவு நிலை பண்புகளை கொண்ட மாதிரிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. முக்கியமான தரவுத்தள மாதிரிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.


படிவு நிலை தரவுதள மாதிரி 




IBM - ன் முதல் DBMS ஆன IMS தகவல் மேலாண்மை அமைப்பு (information management system) என்பது பிரபலமான படிவு நிலை தரவுதள மாதிரியாக இருந்தது. இந்த மாதிரியின் ஒவ்வொரு பதிவிலும் (record's) தகவல்கள் மரக்கிளை அமைப்பை போன்ற பெற்றோர்- குழந்தை உறவு நிலையில் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த மாதிரியில் குறைந்த தேவையற்ற தரவுகள் திறமையான தேடல், தரவு ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற பல நிறைகள் உள்ளன. இது பல உறவுநிலைகளை ,கையாள்வதில் கடினம் மற்றும் நடைமுறை படுத்துதல் சிக்கல் போன்ற சில குறைகளை கொண்டுள்ளது

Comments

Popular posts from this blog

Introduction to the system and the functions of the system in tamil

System structure and system principles in tamil

What is the economyin tamil