What is the economyin tamil
பொருளாதாரத்தின் அறிமுகம்
பொருளாதார பாடமானது, நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் என்று இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நார்வேயைச் சேர்ந்த பொருளியல் வல்லுனரும், பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற இணை பெறுநர் ரேக்னர்ஃபிர்ஸ்ச் (Ragnar Frisch) என்பவர், சிறிய என பொருள் கொண்ட மைக்ரோ (Micro) மற்றும் பெரிய என்று பொருள் கொண்ட மேக்ரோ (Macro) என்னும்பதங்களை1933-ல்உருவாக்கினார். இருப்பினும், பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது ஜான் மேனாட் கீன்ஸ் (John Maynard Keynes) ஆல் 1936ம், ஆண்டு வெளியிட்ட "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு (The General Theory of Employment, Interest and Money) நூலிலிருந்து தோன்றியதாகும். உலக மகாமந்த (World Great Depression) காலத்தில், பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை கீன்ஸ் வழங்கினார். எனவே, கீன்ஸ் ஐ நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என்பர்.
பேரியல் பொருளாதாரத்தின் பொருள்
கிரேக்க மொழியில் உள்ள 'Makros' என்ற சொல்லில் இருந்து 'Macro' என்ற சொல் பெறப்பட்டது. அதன் பொருள் "பெரிய" என்பது ஆகும். பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதாரஅமைப்பு முழுமையையும் படிப்பது ஆகும். மாற்றாக கூறின், பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தமாகிய தேசிய வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கியது. 'பேரியல் பொருளாதாரத்தை வருவாய் கோட்பாடு எனவும் அழைப்பர்.
பேரிய பொருளாதாரத்தின் உள்ளடங்கும். பகுதிகளாவன:
வேலைவாய்ப்பு, தேசிய வருவாய், பணவீக்கம், வணிகச் சுழற்சி, வறுமை, ஏற்றத்தாழ்வு, வேறுபாடு, முதலீடு மற்றும் சேமிப்பு, மூலதன ஆக்கம், கட்டமைப்பு:
மேம்பாடு, பன்னாட்டு வாணியம், பன்னாட்டு வாணிகச் சமநிலை மற்றும் பன்னாட்டு செலுத்துதலின் சமநிலை, மாற்று விகிதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகும்.
ஒரு பேரியல் பொருளாதர அமைப்பில் பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் பேரியல்பொருளாதார கண்ணோட்டம் மற்றும் அதன்முக்கியத்துவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளாதார அமைப்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளை புரிந்து கொள்ளவும், அதற்குத் தேவையான சரியான யுக்திகளை மாற்றவும் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
எதிர்கால பிரச்சினைகளைப் புரிந்துக் கொள்ளவும், தேவைகள் மற்றும் சவால்களை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பேரியல் பொருளாதாரம் பயன்படுகிறது.நடப்புப் பிரச்சினைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கிறது.பொருளாதாரக் குறியீடுகளை பகுத்தாயவும்: அவைகளை ஒப்பிடவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவும், சரியான கொள்கைகளை உருவாக்கவும், எதிர்காலத்தில் முன்கணிக்கவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது. 1.4
பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை (SCOPE)
பேரியல் பொருளாதாரத்தின் பரப்பெல்லை மிகப் பெரியதாகவும் பல முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
தேசிய வருவாய் (National Income)
தேசிய வருவாயை கணக்கிடுதல் மற்றும் தேசிய வருவாயில் துறைகளின் பங்கு போன்றவை பேரியல் பொருளாதார பகுத்தாய்வின் அடிப்படை அம்சங்களாகும், தேசிய வருவாய் மற்றும் அதன் பங்குகளின் போக்கு ஒரு பொருளாதார அமைப்பின் வளர்ச்சி முறையின் நீண்ட கால அறிவைத் தருகிறது.
பண வீக்கம் (Infiation)
பண வீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும். மொத்த விலை குறியீட்டெண், மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டெண் போன்ற விலை குறியீட்டெண்களைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.
வாணிபச் சுழற்சி (Business Cycle)
பொதுவாக எல்லா நாடுகளும் வாணிப ஏற்றத் தாழ்வு மற்றும் வாணிப சுழற்சியால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கின்றன. மொத்த பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் வாணிபச் சுழற்சி மாற்றங்களைத் (செழிப்பு, பின்னிறக்கம், மந்தநிலை மற்றும் மீட்பு) தெரிந்துக் கொள்ள முடிகிறது.
வறுமை மற்றும் வேலையின்மை (Poverty) and Unemployment) வளங்கள் வறுமை மற்றும் நிறைந்த நாடுகளிலும் வேலையின்மை மிகப் பொருந்துவது, மற்ற நாட்டிற்கும் மேலும் மற்றொரு காலத்திற்கும் பொருந்தாது.
4. பொருளாதார நடவடிக்கைகளை பல காரணிகள் இக்காரணிகள் இடம் பெறவில்லை.. பொருளாதாரமற்ற பேரியல் பொருளாதார கோட்பாடுகளில் தீர்மானிக்கின்றன.
பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும்
பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை ஏ.ஜே. பிரவுண் (A.J, Brown) என்பவர், மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது” என்று வரையறுத்துள்ளார், ஜே.ஆர், ஹிக்ஸ் (J.R. Hicks) "நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே பொருளாதார அமைப்பு”என கூறுகிறார்.
சுருங்ககூறின், ஒரு பொருளாதார அமைப்பு என்பது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த முறையையோ அல்லது பகுதியையே குறிப்பதாகும். ஒவ்வொரு பொருளாதார அமைப்பும் அதனது தனி தன்மைகளை கொண்டு காணப்படும், அதன்படி, அதன் பணிகள் அல்லது நடவடிக்கைகளும் வேறுபடும். ஒரு பொருளாதார அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை கீழ்காணும் வரைபடம் மூலம் விளக்கலாம்.
ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகள் உற்பத்தி (Production) மற்றும் நுகர்வு (Consumption) ஆகும். இந்த இரு நடவடிக்கைகளும் பல்வேறு பிற நடவடிக்கைகளால் உதவப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் தலையான நோக்கம் வளர்ச்சியை (Growth) அடைவதாகும். பரிமாற்றம் பணி (Exchange Activity) யானது உற்பத்தி மற்றும் நுகர்வு பணிகளுக்கு உதவுகின்றன. இந்த நடவடிக்கைகள்
செயல்பாட்டின் அடிப்படையில் பொருளாதாரத்தின் பணிகள்
பல்வேறு பொருளாதார மற்றும் பொருளாதார மற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றன. முக்கிய பொருளாதார நடவடிக்களாவன (Economic Activities); போக்குவரத்து, வங்கிப்பணி, விளம்பரம், திட்டமிடல், அரசின் கொள்கை மற்றும் பிற பணிகள். முக்கிய பொருளாதார மற்ற நடவடிக்கைகளாவன (Nan - Economic Activities); சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பொழுது போக்க, ஆட்சிமுறை, நெறிப்படுத்துதல் போன்றவை. இந்த உதவிப் பணிகளுக்கு மேலாக, பிற பொருளாதாரத்தின் வெளி நடவடிக்கைகளான இறக்குமதி, ஏற்றுமதி, பன்னாட்டு உறவுகள், குடியேற்றம், இடப்பெயர்ச்சி, பன்னாட்டு முதலீடு, பன்னாட்டு மாற்று வருவாய் போன்றவை பொருளாதார அமைப்பின் மொத்த செயல்பாட்டையும் பாதிக்கின்றன.
செயல்பாடுகளும் பொதுவுடைமை ஆக்கப்படும் கலப்பு பொருளாதார அமைப்பு என்பது முதலாளித்துவம், சமத்துவம் ஆகிய இரண்டின் இயக்புகளையும் உள்ளடக்கியது. கீழ்கண்ட பகுதியில் பல்வேறு பொருளாதார அமைப்பு முறைகளின் இயல்புகள், நன்மைகள் மற்றும் குறைகள் விளக்கப்பட்டு உள்ளன.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்)
'முதலாளித்துவத்தின் தந்தை' ஆடம் ஸ்மித் ஆவார் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை நடையில்லா பொருளாதாரம் Laissez fairn லேசிபேர். லந்தீனில் – Froe (Economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் (Market Economy) என்றும் அழைக்கிறோம் இங்கு பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் அதிகமாகவும் இருக்கும். பங்கு.
முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும். பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருப்பார்கள், தனிநபர் தங்களுக்கான வேலையைத் தெரிந்தெடுப்பதிலும் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதிலும் சுதந்திரமாகச் செயல்படுவர்: USA, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.
மேலும், இவ்வமைப்புகளில் அங்காடிச் சக்திகளிடம் இருந்து (Market forces) அடித்தட்டு சாதாரண மக்களை பாதுகாக்க தேவையான சமூக நல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்
1. தனியார் சொத்துரிமை மற்றும் பரம்பரைச் சட்டம் (Private Ownership of Property and Law of Inheritance)
முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில், நிலம், உழைப்பு, மூலதனம், இயந்திரங்கள், சுரங்கம் போன்ற அனைத்து வளங்களும் தனிநபர்களுக்கு சொந்தமாக இருக்கும். உரிமையாளர்கள் வளங்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிமம் கொள்ள, வைத்துக்கொள்ள, விற்க மற்றும் பயன்படுத்த அதிகாரம் படைத்தவர்களாவர். உரிமையாளர்கள் இறந்த பிறகு சொத்துக்கள் அவர்கள் வாரிசுகளுக்கு மாற்றப்படும்;
2.தெரிந்தெடுப்பதில் சுதந்திரம் (Freedom of Choice and Enterprise}
ஒவ்வொரு தனிநபரும் தங்களது வேலையைத் தேர்ந்தெடுப்பதிலும், உற்பத்தி செய்யும் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும் மற்றும் வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பர். அதே போன்று நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பார்கள்.
3. இலாப நோக்கம் (Profit Motive)
முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், அனைத்து பொருளாதார. நடவடிக்கைகளிலும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும். ஒவ்வொரு தனிநபர்களும், அமைப்புகளும் அதிக இலாபம் தரக்கூடிய பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள், இங்கு வேலை பகுப்பு, புதிய தொழில்நுட்பம் மற்றும் சிறப்புக் கவனம் போன்றவை பின்பற்றப்படும், முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுகின்ற தங்க விதி (Golden Rule) 'உச்ச இலாபம்'அடைதல்,
4.போட்டியில் சுதந்திரம் (Free Competition)
பொருட்கள் சந்தை மற்றும் காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு. அரசாங்கமோவேறு எந்த அமைப்போ நிறுவனங்களின் வாங்குதல் மற்றும் விற்பதில் தலையிட முடியாது, வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே போட்டி நிலவும்.
5. விலை இயங்கு முறை (Price Mechanism)
விலை இயங்கு முறையானது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின்
இதயமாகும். அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் விலை இயங்கும் முறை, தேவை மற்றும் அளிப்பு அங்காடி சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
6. அரசின் பங்கு (Role of Government)
முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் விலை இயங்கு முறையை கட்டுப்படுத்துவதால், அரசின் பங்கு மிகக் குறைவாக இருக்கும். அடிப்படை பணிகளான பாதுகாப்பு, பொதுநலம், கல்வி போன்றவற்றை அரசாங்கம் வழங்குகிறது.
7.வருமான ஏற்றத்தாழ்வு (Inequalities of Income)
முதலாளித்துவ சமுதாயம் இரண்டு வகுப்பாகப் பிரிக்கப்படுகிறது. சொத்துக்களை வைத்திருப்பவர்கள் (Haves) மற்றும் சொத்துக்கள் இல்லாதவர்கள் (Have → nots)
எனப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, இன்னும் பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் இருக்கின்றனர். இதனால் பொருளாதார சமனற்ற நிலை அதிகரிக்கிறது.
பணக்காரர்கள்
முதலாளித்துவத்தின் நன்மைகள் (Merits of Capitalism)
இயங்குதல்: முதலாளித்துவ பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்
1. தானாக திறமையாகப் பயன்படுத்துதல்: இப்பொருளாதாரத்தில் அனைத்து வளங்களும் திறமையாக உத்தம அளவில் பயன்படுத்தப்படுகிறது.
3.கடின உழைப்பிற்கு வெகுமதி: கடின உழைப்பு ஊக்குவிக்கப்படுவதும், அதிக திறனால் தொழில் முனைவோர்கள் அதிக இலாபம் பெறுவதும் காணப்படும்;
4.பொருளாதாரமுன்னேற்றம்:முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அளவு மிக அதிகமாகும்.
5.நுகர்வோர் இறையாண்மை: அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகர்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன.
6, மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்: சேமிப்பும், முதலீடும் அதிகரிக்கும். மூலதன ஆக்க வீதத்தை உயர்த்த வழி வகுக்கும்.
7.புதிய தொழில்நுட்ப முன்னேற்றம்; இலாபம் பெறுவது நோக்கமாக இருப்பதால், உற்பத்தியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தில் முதலீடு செய்து, தரமான பொருட்களை உற்பத்தி செய்வர்.
முதலாளித்துவத்தின் குறைகள் (Demerits of Capitalism)
1. வருமானம் மற்றும் செல்வச் செறிவு
முதலாளித்துவத்தில் வருமானம் மற்றும் செல்வம் சிலரது கைகளில் மட்டும் குவிகிறது. இதனால் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது.
2. வளங்கள் வீணாக்கப்படுதல்
போட்டி விளம்பரங்களினாலும் பொருட்களின் பிரதிகளினாலும் வளங்கள் அதிக அளவில் வீணாக்கப்படுகின்றன.
3. வகுப்புப் போராட்டம்
முதலாளித்துவமானது. சமுதாயத்தை முதலாளிகளாகவும், வேலைக்காரர்களாகவும் பிரிப்பதால் வகுப்பு போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
4. வாணிபச் சுழல்
தடையில்லாச் சந்தை முறை (FreeMarket System) அதிக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் கொண்டு செல்கிறது.
5. அத்தியாவசியமில்லா உற்பத்தி பொருட்களின்லா பத்தைப் பெறுவதற்காக வாய்ப்பு இருக்குமாயின், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூட உற்பத்தி செய்யப்படும்.
சமத்துவப் பொருளாதார அமைப்பு (Socialism)
கார்ல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை ஆவர், சமத்துவம் என்பது மொத்த திட்டமிடுதல், பொது உடமை மற்றும் பொருளாதார நடவடிக்கைளில் அரசின் கட்டுப்பாடு ஆகிய முறைகளை குறிப்பிடுவதாகும். அரசே பெரும்பான்மையான தொழில்களை உரிமம் கொண்டு மற்றும் கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தின் ஒழுங்குபடுத்தும் முறையை வரையறுப்பது சமத்துவம் ஆகும். ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பை, திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy) அல்லது கட்டளைப் பொருளாதாரம் Economy) என்றும் அறியப்படுகிறது. (Command
ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து வளங்களையும் அரசே உரிமமாக்கி பயன்படுத்தும், பொதுநலமே (Public Welfare); அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும்.. வருவாய் மற்றும் செல்வம் பகிர்வதில் சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் குறிக்கோள். ரஷ்யா, சீனா, வியட்நாம், போலந்து மற்றும் கியூபா ஆகியவை சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமாகும். ஆனால் தற்காலத்தில், முற்றிலும் பொருத்தமான சமத்துவ பொருளாதார அமைப்புகள் எங்கும் இல்லை.
Comments
Post a Comment