What is Adobe page maker in tamil


டெஸ்க்டாப் பப்ளிஷிங்
(Desktop publishing)


இந்த காலத்தில் டெஸ்க்டாப் பப்ளிஷிங் (desktop publishing) என்ற வார்த்தைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது. 


டெஸ்க்டாப் பப்ளிஷிங் என்றால் என்ன?



டெஸ்க்டாப் பப்ளிஷிங் என்பது (சுருக்கமாக DTP என அழைப்போம்) DTP மென்பொருளை பயன்படுத்தி ஆவணங்களுக்கான பக்கங்களை வடிவமைப்பு ( page layout) செய்வதாகும். 


இன்றைய மென்பொருள் சந்தையில் கிடைக்கும் புகழ்பெற்ற DTP மென்பொருள்களுள் சில. 


அடோப் பேஜ் மேக்கர் (Adobe pagemaker), அடோப் இன்டிசைன் ( Adobe InDesign), குவார்க் எக்ஸ்பிரஸ் ( quark Express) போன்றவை ஆகும்.


அடோப் பேஜ் மேக்கர் :-
(Adobe pagemaker)



அடோப் பேஜ் மேக்கர் என்பது ஒரு பக்க வடிவமைப்பு மென்பொருளாகும். இது அச்சுடுவதற்கு ஏற்ற வகையில் ஆவணங்களை வடிவமைக்க படுகிறது. இதை பயன்படுத்தி சிறிய வணிக அட்டை முதல் பெரிய புத்தகம் வரை அனைத்தையும் வடிவமைக்கலாம்.


     பக்க வடிவமைப்பு மென்பொருளில் உள்ள கருவிகள் , ஆவணத்தில் எளிதாக உரை மற்றும் வரைகலை வடிவங்களை சேர்க்க உதவுகிறது. உதாரணமாக , பேஜ் மேக்கரை பயன்படுத்தி , ஒவ்வொரு பக்கத்திலும் கட்டுரைகள் மற்றும் படங்களை வைத்து ஒரு செய்தி மடலை (newsletter) உருவாக்க முடியும். உரைகளையும், படங்களையும் அடுத்தடுத்துப், மேலும் கீழுமாகவும் என எங்கு வேண்டுமானாலும் நீங்கள் நினைத்து படி வைக்கலாம்.

    


பேஜ் மேக்கரை திறத்தல் :-
( Open page maker)



விண்டோஸ் 7 இயக்க அமைப்பில் ,

Start > all programs > pagemaker 7.0 > Adobe pagemaker 7.0  என்ற வரிசையில் பேஸ்மேக்கரை ஓபன் செய்யலாம்.



புதிய ஆவணத்தை உருவாக்குதல்
(Documents set-up)


புதிய ஆவணத்தை உருவாக்க,


1. பட்டிபட்டையில் file > new என்பதை கிளிக் செய்ய வேண்டும் அல்லது விசைப்பலகை மூலம் ctrl+ N என்பதை அழுத்த வேண்டும். இப்பொழுது document setup என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்.


2. இந்த உரையாடல் பெட்டியில் புதிய ஆவணத்திற்கு தேவையான அளவுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.



3. பிறகு ok பொத்தானை அழுத்தவும். இப்பொழுது United 1 என்ற பெயரில் புதிய ஆவணத்தை காண்பீர்கள். கருப்பு நிற எல்லை கோட்டின் உள்ளே இருப்பது ஒரு ஆவணத்தின் பக்கம் ஆகும். கருப்பு நிற எல்லை கோட்டின் வெளியில் உள்ள பகுதி ஒட்டுபலகை ( past board) என அழைக்கப்படுகிறது. ஒட்டுபலகையில் வைக்கப்படும் எதுவும் ஆவணத்தை அச்சிடும் போது வராது . ஆவணத்தை வடிவமைப்பதற்கு தேவையானவற்றை வைத்து கொள்ளும் ஒரு தற்காலிகமான இடமாக ஒட்டுபலகையை பயன்படுத்தலாம்.


பேஜ் மேக்கர் ஆவண சன்னல் திரையில் உள்ள முதன்மை பகுதிகளான தலைப்புப் பட்டை, பட்டி பட்டை,கருவிபட்டை,அளவுகோல்,திரை உருளல் பட்டை மற்றும் உரைப் பகுதி ஆகிய வற்றையும் கீழே காண்போம்.


தலைப்பு பட்டை ( tittle bar) 


இது சன்னல் திரையின் மேல் உள்ளது. இதன் இடது ஓரத்தில் மென்பொருளின் பெயர் மற்றும் ஆவணத்தின் பெயர் இடம் பெற்றிருக்கும். வலது ஓரத்தில் சிறிதாக்கும் பொத்தான், பெரிதாக்கு பொத்தான், மூடு பொத்தான் போன்ற கட்டுபாட்டு பொத்தான்கள் இடம் பெற்றிருக்கும்.


தலைப்பு பட்டையின் இடது ஓரத்தில் adobe pagemaker 7.0  என்னும் மென்பொருளின் பெயரையும், அதை தொடர்ந்து untitteled 1 என்னும் ஆவணத்தின் தொடர்நிலை பெயரையும் காணமுடிகிறது. பயனர் உரிய பெயரை கொடுத்து ஆவணத்தை சேமிப்பதன் மூலம் untitteled 1 என்னும் பெயரை மாற்றி கொள்ள முடியும். 


சிறிதாக்கு பொத்தானை அழுத்துவதன் மூலம் சன்னல் திரை சிறிய பொத்தானாக மாறி பணிப்பட்டைக்கு வந்துவிடும்.


பெரிதாக்கு பொத்தான் , ஆவணம் திரை முழுவதும் நிரம்பும் வகையில் பெரிதாக்க பயன்படுகிறது.

மூடு பொத்தான் ஆவணத்தை மூடுவதற்கு பயன்படுகிறது.


பட்டிப்பட்டை ( menu bar)


இந்த பட்டை file,edit,layout,type,element,untilties,view,window,help போன்ற பட்டியல்களை கொண்டுள்ளது. ஒரு பட்டியில் கிளிக் செய்தால் பல கட்டங்கள் மற்றும் துணைப்பட்டியல்களுடன் கூடிய பட்டியல் தோன்றும்.


கருவிப்பட்டை (toolbar)


கருவிப்பட்டியில் உள்ள ஒரு பொத்தான் மீது சுட்டியை வைக்கும் போது, அதை பற்றி சிறிய உரை திரையில் தோன்றும். அதற்கு 'tool tip' என்று பெயர்.


கருவிப்பெட்டி (toolbox)


கருவிப்பெட்டியில் தலைப்பு பட்டையில் கிளிக் செய்து அழுத்தி பிடித்து அதை நகர்த்தலாம். 

கருவிப்பட்டி திரையில் தோன்றாவிட்டால் , பட்டிப்பெட்டியில் window > show tools என்பதை கிளிக் செய்து மறைக்கலாம்.


கருவிப்பெட்டியை மறைக்க,பட்டிப்பட்டையில் window> hide tools என்பதை கிளிக் செய்து மறைக்கலாம்.


  கீழே உள்ள அட்டவணை 2.1 அட்டவணை 2.2 கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளுக்கான விசைப்பலகை குறுக்கு வழிகள்.


திரை உருளல் பட்டை (scroll bars)


ஆவணத்தை மேலும் கீழுமாகவும்,இடது மற்றும் வலது புறமாகவும் நகர்ததுவதை திரை உருளல் செய்தல் (scrolling) என்கிறோம். ஆவணத்தை மேலும் கீழுமாக நகர்த்த செங்குத்துத் திரை உருளல் பட்டையும் ,இடது மற்றும் வலது புறமாக நகர்த்த கிடைமட்டத் திரை உருளல் பட்டையும் பயன்படுகிறது.



அளவுகோல்கள்( rulers)


பேஜ் மேக்கர் ஆவணத்தின் மேல் மற்றும் இடது ஓரத்தில் இரண்டு அளவுகோல்கள் உள்ளன.


1. அளவுகோலை திரையில் காண்பிக்க,பட்டிபட்டையிலீ view> show rulers என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


2. அளவுகோலை மறைக்க , பட்டிப்பட்டையில் view > hide rulers என்பதை கிளிக் செய்யவும்.




ஆவணத்தின் உரையை உள்ளிடுதல்

(Entering text in the document)



பேஜ் மேக்கர் ஆவணத்தின் உரைதொகுதியின் (text block) உள்ளே உரையை உள்ளிட வேண்டும். உரை தொகுதியை உருவாக்க டெக்ஸ்ட் டூலை பயன்படுத்த வேண்டும். டெக்ஸ்ட் டூலை பயன்படுத்தி உரைத்தொகுதியை உருவாக்கிய பின் அதில் உரையை நேரடியாக தட்டச்சு செய்யலாம். உரையை தட்டச்சு செய்யும் போது விட்டு விட்டு தோன்றும் நெடும் பட்டை ஒன்று வலது புறமாக நகர்ந்து கொண்டே செல்லும். அதற்கு செறுகும் புள்ளி என்று பெயர். உரையை தட்டச்சு செய்யும் பொழுது உரையானது உரைதொகுதியின் ஓரத்தை தொட்டவுடன் , தானகவே மடிந்து அடுத்து வரிக்கு செல்லும். உரைதொகுதியின் ஒவ்வொரு வரி முடிவிலும் நுழைவு விசையை (enter key) அழுத்த வேண்டியதில்லை. ஒரு காலி வரி வேண்டுமென்றாலோ முடிவிலோதான் நுழைவு  விசையை அழுத்த வேண்டும்.


Comments

Popular posts from this blog

Introduction to the system and the functions of the system in tamil

System structure and system principles in tamil

What is the economyin tamil