Posts

Showing posts from October, 2021

What is the economyin tamil

Image
பொருளாதாரத்தின் அறிமுகம் பொருளாதார பாடமானது, நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் என்று இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நார்வேயைச் சேர்ந்த பொருளியல் வல்லுனரும், பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற இணை பெறுநர் ரேக்னர்ஃபிர்ஸ்ச் (Ragnar Frisch) என்பவர், சிறிய என பொருள் கொண்ட மைக்ரோ (Micro) மற்றும் பெரிய என்று பொருள் கொண்ட மேக்ரோ (Macro) என்னும்பதங்களை1933-ல்உருவாக்கினார். இருப்பினும், பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது ஜான் மேனாட் கீன்ஸ் (John Maynard Keynes) ஆல் 1936ம், ஆண்டு வெளியிட்ட "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு (The General Theory of Employment, Interest and Money) நூலிலிருந்து தோன்றியதாகும். உலக மகாமந்த (World Great Depression) காலத்தில், பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை கீன்ஸ் வழங்கினார். எனவே, கீன்ஸ் ஐ நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என்பர். பேரியல் பொருளாதாரத்தின் பொருள் கிரேக்க மொழியில் உள்ள 'Makros' என்ற சொல்லில் இருந்து '...

Theoretical concepts of the operating system in tamil

Image
 இயக்க அமைப்பின் கருத்துரு மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல், இயக்க அமைப்பின் அடிப்படை அறிவு மற்றும் அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல், மென்பொருள் ஓர் அறிமுகம் மென்பொருள் என்பது கணிப்பொறியில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான கட்டளைகளின் தொகுப்பாகும். அடிப்படை வன்பொருள்களுடன் செயல்பட்டு இது தேவையான வெளியீடுகளைத் தருகின்றது.  மென்பொருள் வகைகள்  மென்பொருள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: 1) பயன்பாட்டு மென்பொருள் (Application Software) 2) அமைப்பு மென்பொருள் (System Software) பயன்பாட்டு மென்பொருள் பயன்பாட்டு மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கு தேவையான நிரல்களின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, எம்.எஸ், வேர்டு (MS-word) என்பது உரை ஆவணங்களை (text document) உருவாக்க பயன்படும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் (application software) ஆகும், VLC பிளேயர் என்பது ஒரு பிரபலமான ஒலி, ஒளிக் காட்சிகள் மற்றும் பலகோப்புகளைத் திரையிடப் பயன்படும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் ஆகும். அமைப்பு மென்பொருள்: அமைப்பு மென்பொருள் என்பது வன்பொருள்கள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்களை இயக...

System structure and system principles in tamil

Image
 கற்றலின் நோக்கங்கள்:-  * கணிப்பொறியின் பல்வேறு சாதனங்கள் மற்றும் அதன் இணைப்புகள் பற்றி அறிதல், நுண்செயலியும் அதன் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். நினைவகச் சாதனங்களின் முக்கியத்துவத்தையும், கணிப்பொறியில் அதன் பங்கினையும் அறிந்து கொள்ளுதல், 1. RAM மற்றும் ROM களை ஆராய்ந்து அதனை வேறுபடுதல் 2. கேச் நினைவகத்தை அறிதல் மற்றும் கணிப்பொறியின் செயல் திறனை கேச்நினைவகம் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் அறிதல் இரண்டாம் நினைவகச் சாதனங்களும் அதன் பயன்பாடுகளும் பற்றி அறிந்து கொள்ளுதல், தொடர்பு முகம் மற்றம் இடைமுகம் பயன்படுத்தி, வெளிச்சாதனங்கள் எவ்வறு இணைக்கப்படுகிறது என்பதை அறிதல். முன்னுரை கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இதில் உள்ளீட்டு / வெளியீட்டு சாதனங்கள், மையச் செயலகம் (CPU), சேமிப்பு சாதனங்கள் மற்றும் முதன்மை நினைவகம் ஆகியவை அடங்கும். இது கணினியின் பல்வேறு பாகங்களை எப்படி செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. இது ஒரு கணினியின் அனைத்து வன்சாதனங்களும் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றியும், மேலும் பல்வேறு பாகங்களின் இணைப்பு பற்றியும் விளக்குகிற...

Introduction to the system and the functions of the system in tamil

Image
  கணினி அறிமுகம் கற்றலின் நோக்கங்கள்" கணிப்பொறிகள் புரிந்துகொண்டு சேமிக்கின்றன கொள்ளுதல், தரவுகளை எவ்வாறு நினைவகத்தில் என்பதை அறிந்து * பல வகையான தரவு பிரதியீடுகளையும் மற்றும் இருநிலை கணக்கீடுகளையும் பற்றி கற்றல், * பலவகையான எண்முறைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல் பற்றி கற்றல், *  2.1 அறிமுகம் தரவு என்பதற்கான ஆங்கில வார்த்தையான Datin என்ற சொய் Datum என்ற சொல்லிலிருந்து வந்தது, அதன் பொருள் "செயப்படுத்தப்படாத மூல நகவல்" (Ranv facts) என்பதாகும். தரவு என்பது மக்கள், இடங்கள் அல்லது பொருட்களின் பல தகவல்களை கொண்டது. எடுத்துக்காட்டு: பெயர் (Nume), வயது(Age), வகுப்பு (class), மதிப்பெண் (Marlis) மற்றும் பாடம் (Subject) போன்றவை மாறிகள் என்று எடுத்துக்கொள்வோம், இப்போது, இந்த ஒவ்வொரு மாறியிலும் அதற்குரிய மதிப்புகளை இருத்தினால், கீழ்க்கண்டவாறு தோன்றும் , Name. Rajesh Age.     16 Class.  XI Mark. 65 Subject.   Computer Science மேலே கூறப்பட்ட எடுத்துக்காட்டில், ஐந்து மாறிகளில் இருக்கப்பட்ட மதிப்புகள் தரவு எனப்படும், இந்த தரவகள் செயற்படுத...