System structure and system principles in tamil

 கற்றலின் நோக்கங்கள்:- 

* கணிப்பொறியின் பல்வேறு சாதனங்கள் மற்றும் அதன் இணைப்புகள் பற்றி அறிதல், நுண்செயலியும் அதன் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

நினைவகச் சாதனங்களின் முக்கியத்துவத்தையும், கணிப்பொறியில் அதன் பங்கினையும் அறிந்து கொள்ளுதல்,


1. RAM மற்றும் ROM களை ஆராய்ந்து அதனை வேறுபடுதல்


2. கேச் நினைவகத்தை அறிதல் மற்றும் கணிப்பொறியின் செயல் திறனை கேச்நினைவகம் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் அறிதல்


இரண்டாம் நினைவகச் சாதனங்களும் அதன் பயன்பாடுகளும் பற்றி அறிந்து கொள்ளுதல்,


தொடர்பு முகம் மற்றம் இடைமுகம் பயன்படுத்தி, வெளிச்சாதனங்கள் எவ்வறு இணைக்கப்படுகிறது என்பதை அறிதல்.


முன்னுரை


கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இதில் உள்ளீட்டு / வெளியீட்டு சாதனங்கள், மையச் செயலகம் (CPU), சேமிப்பு சாதனங்கள் மற்றும் முதன்மை நினைவகம் ஆகியவை அடங்கும். இது கணினியின் பல்வேறு பாகங்களை எப்படி


செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. இது ஒரு கணினியின் அனைத்து வன்சாதனங்களும் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றியும், மேலும் பல்வேறு பாகங்களின் இணைப்பு பற்றியும் விளக்குகிறது. கணினியின் கட்டமைப்பு என்பதும் கணிப்பொறியின் அமைப்பு என்பதும் ஒன்றே. ஆனால் கணிப்பொறியை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளுடன் கணினி கட்டமைப்பு உள்ளடக்கியது. அதே நேரத்தில் கணினி அமைப்பானது, நிரலருக்கு வன்பொருள் கூறுகளை வெளிப்படையாக விளக்குகிறது. 3.2. நுண்செயலிகளின் அடிப்படைகள்


கணிப்பொறியின் மையச்செயலகம்


என்பது கணிப்பொறியின் முதன்மை அங்கமாகும். இது அனைத்து செயல்களையும் செய்கிறது, இது ஒருங்கிணைந்த சுற்றுகளை உள்ளடக்கிய நுண்செயலியை (Micro processor)அடிப்படையாகக் கொண்டது. முதன் முதலில் நுண்செயலிகள் 1970 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 4004 என்ற முதல் பொதுப்பயன் நுண்செயலியை இண்டெல் (Intel) என்ற நிறுவனம் உருவாக்கியது.


நுண்செயலியானது ஒரு நிரலாக்கம் செய்யக்கூடிய, பற்பல உபயோகத்திற்கான ஒரு சிலிகான் சிப்பாகும். இது கடிகார துடிப்புகளால் இயங்குகிறது. நுண்செயலி இரும எண்களை உள்ளீடாகப் பெற்று எண் கட்டளைக்கேற்ப, செயலாக்கம் செய்து பின்பு வெளியீடுகளை நினைவகத்தில் தேக்கி வைக்கிறது. படம் 3.1ல் உள்ள வரைபடம் நுண்செயலியின் அடிப்படையில் கணிப்பொறியின் செயல்பாகங்களைக் காட்டுகிறது. 


a) கடிகார வேகம்


ஒவ்வொரு நுண்செயலிலும் உள்ளே ஒரு கடிகாரம் உள்ளது. கணிப்பொறியின் ஒவ்வொரு கட்டளையும் நிறைவேற்றுதலின் வேகத்தை இந்த அடிகாரம் கட்டுப்படுத்துகிறது இதுவே கடிகாரத்தின் வேகம் எனப்படும், கணிப்பொறியின் வேகத்தை மெகா ஹெர்ட்ஸ்{MHx-Mega Hertz;) மற்றும் ஜிகாஹெர்ட்ஸ் (GHz Gip Hertz} அளவில் அளக்கப்படுகிறது. 


b} கட்டளைத் தொகுப்பு:


ஒரு கரவின் மீது செயல்பாடுகளைச் செயல்படுத்துவதற்காக, கணிப்பொறிக்கு கொடுக்கப்படும் கட்டளைகளே அறிவுறுத்தல் எனப்படும், நுண்செயலியைச்செயல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அடிப்படை இயந்திர நிலை அறிவுறுத்தல் தொகுதிகளைக்கட்டளைத் தொகுப்பு என்கிறோம், இந்த கட்டளைகளின் தொகுதி பின்வரும் செயல்களை செயல்படுத்துகிறது.


உங்களுக்கு தெரியுமா?'


கடிகாரத்தின் வேகம் கணக்கிடுதல் Hz என்பது Herte டன் சுருக்கம் ஆகும். வெஹர்ட்ஸ், பொதுவாக ஒலி அலை அதிர்வெண்களை அளவிடப் பயன்படுகிறது. ஒலி அலைகள் ஒரு நொடியில் எத்தனை சுற்றுகள் என்ற அளவில் அளக்கப்படுகிறது. ஒலி அலைகள்,வானொலி அலைகள்போன்ற அயை அதிர்வெண்களை அளவிடுவதற்கு ஹெர்ட்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக, சராசரி மனிதனின் காது 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் அலைகளைக் கேட்க முடியும், 20 ஹெர்ட்ஸ் அருகிலுள்ள ஒலி அலைகள் குறைவான சுருதியில் அமைவதையே "bss" அலைகள் எனப்படுகிறது. 5000 14 க்கு அதிகமான ஒலி அலைகள் உயர்ந்த சுருதியில் அமைவதை "rcble" அலைகள் எனப்படுகிறது.


வெர்ட்ஸ் அலை அதிர்வெண்களை அளவிடுவதற்கு பயன்படுவது போல் கணினி செயலியின் வேகத்தை அளவிடவும் பயன்படுகிறது. உதாரணமாக, ஒவ்வொரு மையச் செயலகத்தின் வோம். குறிப்பிட்ட ஒரு அடிகார வேகத்தின் மதிப்பிடப்படுகிறது. இந்த எண்ஒவ்வொருசெயலியும் நொடிக்குஎத்தனை வழிமுறை சுழற்சிகளை இயக்கும் என்பதைக் குறிக்கிறது. நவீன செயலிகளில் ஒரு நொடிக்கு மில்லியன் அல்லது பில்லியன் செயல்களைச் செய்ய முடியும் என்பதைக் கடிகார வேகம் பொதுவாக மேகா வொர்ட்ஸ் அல்லதுஜிகாவொர்ட்ஸில்-அமாவிடப்படுகிறது,


நினைவகம்

 நுண்செயலி - அடிப்படை அமைப்புகள் நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளைக் கொ‌ண்டுள்ளது. அவை,


* கணித ஏரணச் செயலகம்(Arithmetic and Logle Unit - ALU): கணித மற்றும் ஏரணச் செயல்பாடுகளைக் கணிப்பொறியீன்

கட்டளைக்கேற்ப செயல்படுத்தும். கட்டுப்பாட்டசும்; கட்டுப்பாட்டு சமிக்ஞைகளைப் பெற்று கணிப்பொறியின் எல்லா பாகங்களையும் கட்டுப்படுத்துகிறது.


பதிவேடுகள்- (Registers உள்ளமைந்த Internal செயல்பாடுகளுக்குத் தேவையான தரவு.


நினைவகம்‌ Memory);;  

மற்றும் கட்டளைகளைச் சேமிக்கும், படம் 1,2ல் கொடுக்கப்பட்டுள்ளதைப் போல், நுண்செயலியால் நினைவகம், உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்களோடு தொடர்பு கொள்ள முடியும், பாட்டை என்னும் அமைப்பானது கம்பிகளின் குவியலாகும். இது முகவரி பாட்டை தரவு பாட்டை மற்றும் கட்டுப்பாட்டு பாட்டை ஆகியவற்றின் திரட்டாகும், இது, நுண்செயலி பிற சாதனங்களோடு தொடர்பு கொள்ளும் பாதையாக வேலை செய்கிறது.


 வேர்டு அளவு


வேர்டின் அளவு என்பது ஒருதடவை செயலி செயற்படுத்தும் பிட்டுகளின் அளவாகும். ஒரு வேர்டு அளவு என்பது கணிப்பொறியின் முதன்மை நினைவகம் (RAM) செயற்படுத்தும் கட்டளையின் அளவையும், நுண்செயலியில் உள்ள ஊசிகளின் (Pins) எண்ணிக்கையை பொருத்ததாகும், முறையே உள்ளீடு மற்றும் வெரியீடு ஊசிகளின் மொத்த எண்ணிக்கையாளது நுண்செயலியின் கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது.



 மையச் செயலகம் மற்றும் நினைவகத்திற்கு பரிமாற்றம்


மையச் செயலகம் (CPU), தரவு நினைவகப் தரவு பதிவேடுகளையும் (MDR) மற்றும் நினைவக முகவரி பதிவேடுகளையும் (MAR) கொண்டுள்ளது, நினைவகத்திற்கும் மற்றும் மையச் செயலகத்திற்கும் இடையே தேவையான தரவைத் நினைவக தரவு பதிவேடுகள் தேக்கி வைக்கும் . நிரலின் அடுத்து செயற்படுத்த வேண்டிய கட்டளையின் முகவரியை மையச்செயலகத்தில் சேமித்து வைக்கும் ஒரு சிறப்பு பதிவேடு தான் நிரல் பதிவேடு ஆகும். மையச் செயலகத்திலுள்ள கணித ஏரணச் செயலகம் செயற்படுத்த வேண்டிய நினைவக முகவரியை, நினைவக முகவரி பதிவேட்டில் (Program Counter) சேமித்து வைக்கும், பாட்டை (bus) என்பது கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ள பயன்படும் கம்பிகளின் தொகுப்பு ஆகும். RAM யில் உள்ள வேர்டின் அளவும்


நிணைவக தரவு பதிவேட்டின் அளவும் ஒன்றாகும், 8 - பீட் செயலியான Intel 8085 யில் நினைவக தரவு பதிவேடும் மற்றும் RAM யில் உள்ள வேர்டின் அளவும் 8 ஆகும்.


READ செயல்பாடு தரவுகளை (பிட்டுகளை) வேர்டில் இருந்து நினைவக தரவு பதிவேடுகளுக்கு அனுப்பும். WRITE செயல்பாடு தரவுகளை (பிட்டுகளை) நினைவக பதிவேடுகளில் இருந்து வேர்டிற்கு அனுப்பும், தரவு


உங்களுக்கு தெரியுமா?


ஒரு முனையில் 5V. கொடுக்கப்பட்டால் எதிர் முனையில் அதே 5Vபெற முடியும். இதைப்போல கம்பிகளான பாட்டைகள் இரும தரவுகளை மின்னெமுத்துக்களாக (5V என்பது 1 -ஆகவும், OV என்பது 0 ஆகவும்! கம்பிபின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தர வை வோஸ்ட்டேஜ்யாக அனுப்பும்,



 நுண்செயலியின் வகைகள்
நுண்செயலிகளை நிபந்தனைகளின்
வகைப்படுத்தலாம்;


பின்வரும் அடிப்படையில்

* செயலாக்கப்படும் தரவின் அகலம்


. கட்டளைத் தொகுப்பு


3.4.1 செயலாக்கப்படும் தரயின் அகலத்தின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகள்

தரவின் அசுலத்தின் அடிப்படையில் நுண்செயலி கட்டளைகளைச் செயலாக்கும், நுண்செயலியைப் ஊகப்படுத்தலாம்; பின்வருமாறு


  • 8- பிட் நுண்செயலி

  • 16-பிட் நுண்செயலி

  • 32-பிட் நுண்செயலி

  • 64-பிட் நுண்செயலி


கட்டனைத் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியை வகைப்படுத்தல்


நுண்செயலியை வகைப்படுத்தும் போது கட்டளைத் தொகுதியின் அமாவு ஒரு முக்கியமான கருத்தாக அமையும், RISC என்பது Reduced Instruction Set Computers, CISC என்பது Complex instruction Set

Computers.


* RISC செயலிக்கு எடுத்துக்காட்டு Pemtium IV - Intel P6, AMD K6 மற்றும் K7, Intel 386 & 486, Pentium, Pentium II, III மற்றும் Motorola 68000 கணினிகள் CISC செயலியைக் கொண்ட கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.


 நினைவகச் சாதனங்கள்



கணிப்பொறி நினைவகம் என்பது மனித மூளையைப்போன்றதாகும்,கணிப்பொறிநினைவகம் தரவுகளையும் கட்டளைகளையும் சேமித்து வைக்கப் பயன்படுகிறது. நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்ட தரவு மற்றும் கட்டளைகள் இரண்டு வகையில் கையாளப்படுகின்றது (படிக்க எழுதி, அவை தொடர்ச்சியான மற்றும் நேரடி அணுகல் முறையாகும், தொடர்ச்சியான அணுகல் முறையில் நினைவகம் முதலிலிருந்து கடைசிவரை ஒவ்வொன்றும் வரிசையாக அணுகும், ஆனால் நேரடி அணுகல் முறையில் நினைவகம் ஒவ்வொன்றாக அணுகுவதற்கு பதிலாக நேரடியாக அணுகும். படம் 3.6ல் பல வகையாகநினைவகச் சாதனங்கள், அதன் கொள்ளளவு வேகம் மற்றும் விலையின் அடிப்படையில் வரிசைப்படுக்கப்பட்டுள்ளது.


  • Cache Memory

  • Main Memory

  • Hard Disk


 நொடி அணுகஸ் நிளைவுகம் (RAM)


கணிப்பொறியின் முதன்மை நினைவகம் நேரடி அணுகல் நினைவகம் (Random Acceis Memory) என்றும் அழைக்கப்படுகிறது. இது கணிப்பொறியில் ஒரு ஒருங்கிணைந்த சுற்றுகளாக பொருத்தப்பட்டுள்ளது, கணிப்பொறியில் இங்கு தான் இயக்க அமைப்பு, பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தற்போது பயன்பாட்டில் உள்ள தரவுகள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருப்பதை கணினியின் செயலியால் அணுகும்.


நினைவகத்தில் சேமிக்கப்படும் மிகச் சிறிய தகவலை பிட் (Bit) என்றழைக்கின்றோம். நினைவகம் ஒரு நேரத்தில் 18 பிட்டுகளைக் கொண்ட தொகுப்புகளை அணுகும், இதையே ஒரு டைட் (Byte) என்கின்றோம், 'B' என்ற ஆங்கில பெரிய எழுத்தால் பைட் குறிப்பிடப்படும். ஒரு கணினியின் நினைவகம் 1 மெகா பைட்டாகயிருந்தால் (MB) அதில் 1048,576 பைட்கள் (அல்லது எழுத்துக்கள் | தகவல்களைச் சேமிந்த முடியும் (1 MB என்பது 1024 KB மற்றும் TKB என்பது 1024 பைட்கள், இதில் 1024× 1024= 10.48.576 பைட்களாகும்)


RAM ஒரு தற்காலிக நினைவகம் ஆகும், அதாவது இதில் சேமிக்கப்படும் தகவல்கள் நிரந்தரமில்லை, கணிப்பொறிக்கு செலுத்தும் மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் அதில் உள்ள அனைத்து தரவகளும் அழிந்து விடும். முதன்மை நினைவகம் READ மற்றும் WRITE செயல்களை அனுமதிக்கும்,


 நேரடி அணுகல் நினைவகத்தின்


வகைகள்


RAM - ன் இரண்டு அடிப்படை வகைகள் . 

மாறும் முதன்மை நினைவகம் (Dynamic RAM -DRAM]

நிலையான முதன்மை நினைவகம் (Static RAM -SRAM]


மேலே கூறிய நினைவகங்கள் தரவை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தில் மாறுபடுகிறது. மாறும் முதன்மை நினைவகம் அடிக்கடி நினைவகத்தைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். ஆனால் நிலையான முதன்மை நினைவகம் சில நேரங்களில் புதுப்பித்தால் போதும், இதனால் இந்த வகையான நினைவகம் வேகமாக செயல்படுகின்றது. நிலையான முதன்மை நினைவகம்,மாறும் முதன்மை நினைவகத்தை விட அதிக உயர்ந்ததாகும்,


 படிக்க மட்டும் நினைவகம் (ROM)


படிக்க மட்டும் நினைவகம் (ROM) கணிப்பொறியின் ஒரு சிறப்பு நினைவகம், இது உருவாக்கப்படும் போதே, தரவுகள் பதிவு அதிக கொள்ளளவு மெதுவான அணுகல் நேரம் மற்றும் குரைந்த விலை, சிறிய கொள்ளவை வேகமான அணுகல் நேரம் மற்றும் அதிக விலை செய்யப்பட்டு விடுவதால் அதில் மாற்றம் செய்ய முடியாது. இதில் சேமிக்கப்படும் நிரல்கள் கணினியைத் துவக்கவும் மற்றும் தொடங்கும் போது செய்ய வேண்டிய செயல்கள் போன்றவை

இத்தகைய நினைவகங்களில் வைக்கப்படுகின்றன; ROM ல் கணினியைத் துவங்குவதற்கான மிக முக்கிய நிரல்களைச் சேமித்து வைக்கும், ஒரு முறை தரவுகளை இதில் எழுதியிட்டால் அதை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஆனால் படிக்கமட்டும் முடியும். ROM ன் உள்ளடக்கம் மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் அழிவதில்லை. இதனால் ROM அழியா நினைவகம் என்று அழைக்கப்படுகிறது.


நிரலாக்கு படிக்சு மட்டும் நினைவகம்
(Programmable_Read-Only Memory -
PROM)


நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு அழியா நினைவகம் ஆகும். இதில் தரவுகள் ஒரு முறைமட்டும் எழுத முடியும், PROM - ல் ஒரு முறை நிரல்களை எழுதிவிட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும், முதன்மை நினைவகம் போன்று அல்லாமல் கணினியின் செயல்பாடு நிறுத்தப்பட்டாலும் PROM நிரலர் அல்லது PROM -ன் உள்ளடக்கம் அழியாமல் இருக்கும், PROM-ROMல்இருந்துமாறுபட்டதாகும்.

PROM தயாரிக்கப்படும் பொழுது ஒரு காலி நினைவகமாக தயாரிக்கப்படும், ஆனால் ROM தயாரிக்கும் பொழுதே அதில் நிரல்கள் சேமிக்கப்படுகின்றது,ஆனால் PROMல் நிரலருக்கு தேவைப்படும் பொழுது நிரல்களை எடுத்துக் கொள்ளலாம். PROM Burner பயன்படுத்தி PROM சிப்பில் தரவுகள் எழுதப்படுகின்றது. இந்த வகையான PROM-ன் நிரலாக்கம் PROM-ல் எழுதுதல் என்றழைக்கப்படும்,



 அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும்நி னைவகம்

(EPROM)lirasable/

Programmable Read-Only Memory:


அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம், ஒரு PROM வகையான சிறப்பு நினைவகம் ஆகும், ஆனால் அதில் புற ஊதா ஒளி மூலம் தகவல்கள் அழிக்கப்படுகிறது. EPROM-ல் தகவல்கள் புற ஊதா ஒளி செலுத்தும் வரை தகவல்களைச் சேமித்து வைக்கும், புற ஊதா ஒளியை செலுத்தி PROM-ன் உள்ளடக்கத்தை அழித்தும், மீண்டும் வேறு நிரல்களை மறுபடியும் எழுதலாம். PROM ஒரு முறை எழுதப்பட்டபின் அதை அழிக்கமுடியாது, அதனால் EPROM, PROM லிருந்து மாறுபட்டது, EPROM பொதுவாக தனியாள் கணினியில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.  ஏனெனில் உற்பத்தியாளர்கள் கணினியை வழங்குமுன் PROM-ன் உள்ளடக்கத்தை மாற்றி, மேம்படுத்தி அல்லது நீக்க வேண்டியவற்றை அழிக்க முடியும்,


 அழிக்கக் கூடிய நிரலாக்கு படிக்க மட்டும்
நினைவகம்


 மின்சாரத்தால் அழிக்கும் மற்றும் (EFPROM) Electrically Erasable Programmable Read-Only Memory நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் EEPROM ஒரு சிறப்பு PROM வகையைச சார்ந்த நினைவகம் ஆகும். இதில் உள்ள தரவுகள மின்சாரத்தைச் செலுத்தியே அழிக்கலாம். மற்று PROM வகையைப் போல மின்சாரம் நிறுத்தப்பட்டாலும் தரவுகள் அழியாது. மற்ற ROM வகைகளை ஒப்பிட்டால், EEPROM ஒரு மேதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்,


உங்களுக்கு தெரியுமா?


பொதுவாக EPROM சில்லுகளின் மேல் பகுதியில் வெளிப்படையாக வைக்கப்பட்டு, ஸ்டிக்கர் மூலம் மறைக்கப்பட்டிருக்கும், ஸ்டிக்கர் அகற்றப்பட்டால் சூரிய ஒளியில் உள்ள புற ஊதா ஒளி அதில் உள்ள தரவுகளை அழித்து விடும்,


கேச் நினைவகம்


கேச் நினைவகம் அதிவேகமான, விலை உயர்ந்த நினைவகம் ஆகும், நினைவகத்தில் உள்ள தரவைத் திரும்ப எடுத்தலைத் துரிதப்படுத்துவதற்கு பயன்படும் நினைவகம் ஆகும். இதன் விலை கூடுதலாகும், அதனால் சமையச் செயலகத்தில் முதன்மை நிளனவகத்தின் அளவை விட கேச் நினைவகத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். கேச் நினைவகம் இல்லையெனில் மையச் செயலகம் ஒவ்வொரு முறையும் தரவு தேவைபடும்போது அதை முதன்மை நினைவகத்திலிருந்து பெறும், இது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும், பிகச் நினைவகம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காரணம், இந்த நினைவகத்தில் அடிக்கடி தேவைப்படும் மற்றும் அணுகக்கூடிய தரவுகள் சேமிக்கப்படும். இது விரைவான பதிலளிப்பு நேரத்தைத் தக்க வைக்க உதவுகிறது. அங்கு இயக்க நேரம் (Access) Time) நினைவகம் படிக்க / எழுத கோரிக்கைக்கு எவ்வளவு விரைவாக பதிலளிக்க முடியும் என்பதை குறிக்கின்றது.படம்3.8ல்மையச்செயலகத்திற்கும் முதன்மை நினைவகத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கேச் நினைவகத்தைக் காணலாம்.


  • CPU

  • Cache

  • Fast

  • Slow

  • Mainu
  • Mematy


 இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள்


கணினியின் முதன்மை நினைவகம்,


பொதுவாக குறைந்த அளவிலும், விலை உயர்ந்தும் மற்றும் அழியும் நிலையிலும் இருக்கும். இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களில் தரவு மற்றும் நிரல்கள் நிரந்தரமாக சேமித்து வைக்கப்படும். இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் இயல்பாக அழியா நிலையில் இருப்பதால் இவை முதன்மை நினைவகத்திற்கு ஒரு இணை சேமிப்புசாதனமாக பணியாற்றுகிறது. இதனால் இரண்டாம் நிலை சேமிப்பு "காப்பு சேமிப்பு' (Backup Storage) என்றழைக்கப்படுகிறது.


 வன்வட்டுகள் (Hard Disks)


வன்வட்டு ஒரு காந்தவட்டாகும், இதில் தரவுகளைச் சேமிக்கலாம், வன்வட்டு ஒவ்வொரு வட்டிற்கும் ஒரு ஜோடி தலைகள் கொண்டு அணுகும் வண்ணம் பல வட்டுக்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள ஏற்பாட்டில் அமைந்திருக்கும், வன்வட்டுக்கள் ஒற்றை அல்லது இரட்டை பக்க வட்டுக்களாக இருக்கும்,


 குறு வட்டு (CD)


CD எனப்படும் CD-ROM 1.2 மில்லிமீட்டர் பருமன் அளவில் பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருளால் ஆனதாகும், மெல்லிய அளவிலான அலுமினியம் அல்லது தங்க முலாம் அதன் மேல்பகுதியில் பூசப்பட்டிற்கும். CD - ஸ் தரவுகள் சிறிய தடங்களில் துணுக்குகளாக அதில் சேமிக்கப்படுவது "pits" எனப்படும், இவை அடுக்கின் மேல் ஒரு சுருள் பாதையில் வடிவமைக்கப்பட்டிருக்கும், இரண்டு 193 -களுக்கு இடையே உள்ள இடைவெளி “landi" என்று அழைக்கப்படும், CD) - யைப் படிக்கும் சாதனத்தில் உள்ள மோட்டர் CD-யைச் சுழற்றும், ஒரு சாதாரண CD-ன் கொள்ளளவு 70u MB ஆகும்,



 டிஜிட்டல் வெர்சடைல் வட்டு (DVD)


DVD (Digital Versatile Disc அல்லது Digital Video Disc) கண்ணாடியிழை வட்டு (Optical Disc), 4.7 GB வரை தரவுகள் சேமிக்கும், இந்த அளவு 6 CD-ன் கொள்ளளவுக்கு சமமாகும், திரைப்படங்களைச் சிறந்த தரத்தில் DVD-களில் சேமித்து வைக்கலாம், குறுவட்டுக்களைப் போல DVD- களும் லேசர் மூலம் படிக்க முடிகின்றது.


இவ்வகை வட்டு ஒன்று அல்லது இரண்டு பக்கங்களைக் கொண்டு, மேலும் ஒரு பக்கத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளில் இருக்கும், அதை பொறுத்தே DVD யின் மொத்த கொள்ளளவு கணக்கிடப்படுகிறது. இரு அடுக்கு DVD தங்க நிறத்திலும் ஒரு அடுக்கு உள்ள DVD வெள்ளி நிறத்திலும் கிடைக்கும்.



 டிஜிட்டல் வெர்சடைல் வட்டு

 ஃபிளாஷ் நினைவக சாதனங்கள் (Flash

Memory Devices)


ஃபிளாஷ் நினைவகம் ஒரு மின்னனு (திட நிலை அழிவுறாத சேமிக்கும் சாதனமாகும். மேலும் மின்சாரத்தின் மூலம் நிரல்களை அழித்து, மறுபடியும் நிரலாக்க முடியும், ஃபிளாஷ் நினைவகம் ஒரு FEFROM அல்லது EPROM வகைப்படும், பென் டிரைவ் (Pen drivel, மெமரி கார்டு (Memory card) போன்றவை ஃபிளாஷ் நினைவகத்திற்கான எடுத்துக்காட்டுகளாகும். தனியாள் கணிப்பொறி {Personal Computer), தன்னுடை இலக்க வகை உதவியாளர் (Personal Digital Assistant), டிஜிட்டல் ஆடியோ பிளேயர்கள், டிஜிட்டல் கேமிரா, கையடக்க தொலைபேசிகள் (மொபைல் தொலைபேசி) போன்றவற்றில் இவ்வகை ஃபிளாஷ் நினைவகம் உபயோகிக்கப்படுகிறது. ஃபிளாஷ் நினைவகம் வேகமாக அணுகல் நேரத்தை வழங்குகிறது.நினைவகத்தில் ஒரு எழுத்துருவை படிக்க அல்லது எழுத பயன்படும் நேரத்தை அணுகல் நேரம் எனப்படும்.

 ஃபிளாஷ் நினைவகம் கொள்ளளவு 1 ஜிகா பைட்ஸ் (GB) - யிலிருந்து 2 டெரா பைட்ஸ் (TB) வரையில் கிடைக்கும், படம் 3,11 ல் ஃபினாஷ் நினைவகத்தின் ஒரு மாதிரியைக் காணலாம்,


ப்ளூ ரே வட்டு (Blu - Ray Disc)


ப்ளூ-ரே வட்டு அதிக அடர்த்தியான கண்ணாடி இழை வட்டு வடிவமைப்பு பெற்ற DVD. ஐய ஒத்ததாகும், ப்ளூரே வட்டு பெரும்பாலும்

 விளையாட்டு மென்பொருட்களை, உயர் வரையறை திரைப்படங்களைச் சேமிக்கவும் பயன்படுத்தப்படுகிறது, ஒரு இரண்டு அடுக்கு ப்ளூ ரே வட்டில் 50 GB வரை தரவுகளைச் சேமிக்கலாம், DVDயில் தரவை சேமிப்பதற்கு மற்றும் படிப்பதற்கு சிகப்பு லேசர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ப்ளூ-ரே ப்ளூ வைலைட் லேசர் யைத் தரவை எழுதுவதற்கு பயன்படுத்துவதால் ப்ளூ-ரே என்று பெயர் பெற்றது.



 ப்ளூ-ரே வட்டு

தொடர்பு முகம் (Ports) மற்றும்
இடைமுகம் (Interface)


படம்  காட்டப்பட்டுள்ளது போல ஒரு கணிப்பொறியின் "மதர்போர்டு"யின் (Mother Board) பின்புறத்தில் தொடர்பு முகம் மற்றும் இடைமுகங்களை இணைப்பதற்கு i/o துளைகள் உள்ளன. கணிப்பொறியுடன் வெளிக்கருவிகளை இணைப்பதற்கு தனித்தனி தொடர்பு முகமும், இடைமுகங்களும் உள்ளன. பல வகையான தொடர்பு முகங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன தொடர் தொடர்பு முகம் (Serial Port) கணினிகளில் வெளிக்கருவிகளை பழைய இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. இணையான தொடர்பு முகம் (Parallel  Port) - பழைய கணினிகளில் அச்சுப்பொறிய இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.  USB தொடர்பு முகம் - கேமராக்கள், ஸ்கேனர்கள்,மொபைல்கள், வெளிப்புற வன்தட்டு மற்றும் அச்சுப் பொறிப் போன்ற வெளிப்புற கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.VGA இணைப்பான்: LCD புரொஜெக்டர் அல்லது காட்சி திரையைக் கணினியுடன் இணைப்பதற்கு பயன்படும்,


ஆடியோ பிளக்ஸ் (Andio Plags);

கணினியுடன் ஒலிபெருக்கி, மைக்ரோ ஃபோன் மற்றும் ஹெட் போன்கள் (Head phones) இணைப்பதற்கு பயன்படுகிறது. PS/2Port:

விசைப்பலகையைக் சுட்டி மற்றும் கணினியுடன் இணைப்பதற்குப் பயன்படுகிறது. SCSI Port: வன்வட்டு, பிணைய இணைப்பிகள் கணினியுடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மாணவர் செயல்பாடுகள்‌ கணினியில் உள்ள பல்வேறு தொடர் முகங்களையும் அவற்றின் பயன்களையும் காண்பித்து விளக்கவும், கணினியின்பலபாகங்களைக் கண்டறியவும்.


வெளிப்புறச் சாதனங்களை கணிப்பொறியுடன் எவ்வாறு  இணைக்கவேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக அச்சுப்பொறி அல்லது I.CD புரொஜக்டர்.

Comments

Popular posts from this blog

Introduction to the system and the functions of the system in tamil

What is the economyin tamil