Introduction Hypertext Processor (PHP) in tamil

 அறிமுகம் மீஉரை முன்செயலி ( PHP) 


இணையம் மற்றும் வலைசார்ந்த ஆன்லைன் பயன்பாடுகள் வணிகம் மற்றும் பொழுது போக்கு தொழில் துறையில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. 


இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபலமான மேற்கோள் பின்வருமாறு 


"உங்களது வணிகம் இயக்கத்தின் மூலம் நிறுவபடவில்லையெனில் வணிகம், வணிக சூழலை விட்டு வெளியேற்றப்படும்".

மைக்ரோசாப்டின் நிறுவனர் - பில்கேட்ஸ்


வலை சார்ந்த இணைய பயன்பாடுகள் நிகழ் உலக போட்டிகளில் நெருக்கடியான வணிகத்தின் வெற்றியை உறுதி செய்கிறது. மரபு வழி நிரலாக்க மொழிகள் சமிபத்திய இணைய கருத்துருக்கள் மற்றும் செயல்பாடுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வில்லை .


1990-ன் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் டிம் பெர்னர்ஸ் -லீ என்பவர் இணையம் மற்றும் உலகலாவிய வலை (www.wordldwideweb) ஆகியவற்றின் கருத்துக்களை அறிமுகப்படுத்தினார்.இந்த கருத்துருக்களுக்கு வலையமைப்பு தொடர்பில் பயன்படுத்தக்கூடிய புதிய நிரலாக்க மொழிகளின் தொகுப்பு தேவைப்பட்டது . சமிபத்தில் இந்த நிரலாக்க மொழிகளை வலை ஸ்கிரிப்ட் மொழிகள் என்றழைக்கிறோம்.


வலை ஸ்கிரிப்டிங் மொழிகள் உலகம் முழுவதும் உள்ள நெருக்கடியான வணிக சிக்கல்களை எளிதாக கையாள்வதற்கும் அதனை தீர்ப்பதற்குமான பல கொள்கைகளை கொண்டுள்ளது. 1990க்கு பிறகு இணைய வழி வணிகத்தை ஆதரிக்கும் பல வலை ஸ்கிரிப்டிங் மொழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


    PHP என்பது சேவையகம் சார்ந்த வலை மற்றும் பொது பயன்பாட்டு ஸ்கிரிப்டிங் மொழிகளில் முக்கியமான ஒன்றாகும். 1994 ல் ரஸ்மஸ் லேர்டார்ப் (ramus lerdorf) என்பவர் இதை உருவாக்கினார். இது மிக எளிமையானது மற்றும் இலகுவான சிறந்த மூல சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழியாகும். இதனை எளிதாக HTML மற்றும் பிற பயனாளர்கள் சார் ஸ்கிரிப்டிங் மொழிகளான CSS (cas cading style sheet)  மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் உடன் உட்பொதிக்க முடியும் .‌இது மேலும் நிகழ்நேர வேலை உருவாக்க திட்டங்களில் இயங்கு மற்றும் ஊடாடு வலை பக்கங்களை உருவாக்கின்றது .


 இது பிற சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகளான Microsoft ASP (active server page) மற்றும் JSP (Java server page) ஆகியவற்றைக்கு போட்டியாகவும் மாற்றாகவும் இருக்கிறது. PHP ஸ்கிரிப்டிங் மொழியை பயன்படுத்தி 78.9% வலைதளங்கள் உருவாக்கபடுகின்றன என சமிபத்திய சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழி பயன்பாட்டு புள்ளி விவரம் எடுத்துரைக்கிறது.

 

 

பல்வேறு சேவையகம் சார்ந்த நிரலாக்க மொழிகளின் உலகலாவிய  பயன்பாட்டு புள்ளி விவரங்கள்


PHP ஸ்கிரிப்டிங் மொழி, வலை சேவையகங்கள் அல்லது CHI களில் (common gateway interface) நிறுவப்பட்டுள்ள மொழிபெயர்ப்பின் மூலம் இயக்கப்படுகின்றது. பெரும்பான்மையான வலை சேவையகங்கள் அதாவது Apactive tomcat மற்றும் Microsoft iis (internet information server) ஆகியவை PHP மொழிபெயர்ப்பின் தொகுதியினை ஆதரிக்கின்றன.


PHP ஒரு திறந்த மீல சமுக உருவாக்கத்தின் தொடக்கமாகும். அதன் தரத்தினையும் வலை உருவாக்க செயல்பாடுகளை எளிதாக்கவும் பல பதிப்புகளை கொண்டுள்ளது. 2017 நவம்பர் 30 ல் தற்போதைய பதிப்பான PHP 7.3 யை அதிகாரபூர்வ குழு வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Database management system in tamil

What is the economyin tamil

What is Adobe page maker in tamil