What is the economyin tamil
பொருளாதாரத்தின் அறிமுகம் பொருளாதார பாடமானது, நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் என்று இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நார்வேயைச் சேர்ந்த பொருளியல் வல்லுனரும், பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற இணை பெறுநர் ரேக்னர்ஃபிர்ஸ்ச் (Ragnar Frisch) என்பவர், சிறிய என பொருள் கொண்ட மைக்ரோ (Micro) மற்றும் பெரிய என்று பொருள் கொண்ட மேக்ரோ (Macro) என்னும்பதங்களை1933-ல்உருவாக்கினார். இருப்பினும், பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது ஜான் மேனாட் கீன்ஸ் (John Maynard Keynes) ஆல் 1936ம், ஆண்டு வெளியிட்ட "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு (The General Theory of Employment, Interest and Money) நூலிலிருந்து தோன்றியதாகும். உலக மகாமந்த (World Great Depression) காலத்தில், பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை கீன்ஸ் வழங்கினார். எனவே, கீன்ஸ் ஐ நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என்பர். பேரியல் பொருளாதாரத்தின் பொருள் கிரேக்க மொழியில் உள்ள 'Makros' என்ற சொல்லில் இருந்து '...